குடியுரிமை திருத்தச் சட்டம்¸ 2019

–  அதுல் அலெக்சாண்டர் மற்றும் ப்ரீத்தி ராணி

 

(This blog is the third in the series of blogs that JILS will publish in various vernacular languages as a part of its new initiative to mark the International Mother Language Day.)

முன்னுரை:
குடியுரிமை என்பது ஒரு மனிதனுக்கு பல உரிமைகளைத் தரக் கூடியது என்பதை நாம் உணர்ந்திருப்பதில்லை. ஒரு நாட்டில் குடியுரிமை பெற்று வாழ்வதன் மூலம் கிடைக்கும் உரிமைகளில் சில¸ அந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சுகந்திரமாக குடியேறலாம்¸ அந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பவரையே தேர்ந்தெடுக்கும் உரிமை¸ அந்த நாட்டின் அரசு வேலைக்கு தகுதி கிடைக்கும்¸ மேலும்¸ எந்நேரமும் நாடு கடத்தப்படுவோம் என்ற அச்சம் எதுவும் இல்லாமல் நிம்மதியுடன் சுதந்திரமாக வாழலாம். மேலும் குடியுரிமையானது இந்தியர்களான நாம் அணைவரையும் ஒரு தாய் பிள்ளைகளாக இணைக்கிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலை தலைகீழாக உள்ளது. நாட்டு மக்கள் அணைவரும் தாங்களாக ஒரு ஒரு பெருளை (அர்த்தத்தை) இந்த குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு கொடுத்து சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றனர். இந்த கட்டுரையானது குடியுரிமைத் திருத்த சட்டம்¸ 2019ஐப் பற்றிய சரியான விளக்கத்தை கொடுக்கும் வகையில் அமையும்.

இந்தியாவில் குடியுரிமை பெரும் வழிகள்:
இந்தியக் குடியுரிமைச் சட்டம்¸ 1955ன்படி கீழ்காணும் வழிகளில் இந்திய குடியுரிமை ஒருவர் பெறலாம் என்று கூறுகிறது

1. பிறப்பின் மூலம் குடியுரிமை பெறுதல்
2. வம்சாவளியாக வருவதன் மூலம் குடியுரிமை பெறுதல்
3. பதிவு செய்வதன் மூலம் குடியுரிமை பெறுதல்
4. இந்தியாவை பிரிக்கும் பொழுது இந்தியாவிலேயே குடியேற விருப்பம் தெரிவிப்பதன்மூலம் குடியுரிமை பெறுதல்
5. கடைசியாக¸ ஒரு மணிதர் எந்த நாட்டின் குடியுரிமை பெற விரும்புகிறாறோ¸ அந்த நாட்டின் அரசே அந்த நாட்டின் குடியுரிமை பெறும் வழிகளைத் தளர்த்துவதன் மூலம் அந்த நாட்டின் குடியுரிமை பெறலாம்.

இப்பெழுது நாம் பார்த்த இந்த ஐந்து வழிகளில் கடைசியாக சொல்லப்பட்ட வழி தான் இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம்¸ 2019. நம் நாட்டு அரசே குடியுரிமை சட்டம்¸ 1955யில் திருத்தங்கள் செய்வதன் மூலம் நம் நாட்டில் தஞ்சமாக வந்தவர்களுக்கு நம் நாட்டு குடியுரிமை பெற வழிவகை செய்வது ஆகும். இதைபற்றி விவரமாக காண்போம்.

சட்டவிரோத குடியேறிகள்:
குடியுரிமைச் சட்டம்¸ 1955¸ பரிவு 2(ஆ)ன்படி சட்டவிரோதமாகக் குடியேரியவர்கள் யார்? யார்? என்று குறிப்பிடுகிறது. அந்த வகையில் சரியான கடவுச்சீட்டு அல்லது முறையான பயண ஆவணங்கள் இன்றி இந்தியாவில் நுழைந்தவர்கள் அல்லது சரியான கடவுச்சீட்டு அல்லது முறையான பயண ஆவணங்கள் கொண்டு இந்தியாவிற்கு வந்து ஆனால் குறிப்பிட்ட காலம் முடிந்ததும் இந்தியாவில் இருந்து வெளியேறாமல் இந்தியாவிலேயே தங்கிவிட்டால் அவர்கள் சட்டவிரோத குடியேறிகள் ஆகிறார்கள். அகதிகளாக தங்கள் நாட்டை விட்டு இந்தியாவிற்குள் தஞ்சம் பிழைக்க வந்தவர்களாக இருந்தால் கூட அவர்கள் சட்டவிரோதமாக குடியேரிகள்தான்.
ஆனால்¸ இந்த குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு பின்பு அவ்வாறாக இந்தியாவில் குடியேறியவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என்று கருதபடமாட்டார்கள். அதாவது அவர்கள் 31 டிசம்பர் 2014 அன்றோ அல்லது அதற்கு முன்போ இந்தியாவில் குடியேறி இருந்தால் அப்போது அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் என்று கருதப்படமாட்டார்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சாரம்சம்:
இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒரே வரியில் கூற வேண்டுமானால்¸ மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மை இனத்தவராக இருந்து¸ பாக்கிஸ்தான்¸ பங்ளாதேஷ் அல்லது ஆப்கானிஸ்த்தான் இந்த மூன்று நாட்டுகளில் ஏதோ ஒன்றில் இருந்து இந்தியாவிற்கு தஞ்சமாக வந்து குறைந்தது 5 வருடங்கள் இந்தியாவிலேயே தங்கியிருக்கும் 6 சிறும்மான்மை மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை வழங்குவதே இந்த குடியுரிமைத் திருத்த சட்டத்தின் கரு ஆகும். இதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

இந்த திருத்தத்தின் மூலம் குடியுரிமை பெற தகுதிகள்

1.) இந்த திருத்தத்தின் மூலம் குடியுரிமை பெற¸ அவர்கள் டிசம்பர் 31¸ 2014 அன்றோ இல்லை அதற்கு முன்போ இந்தியாவில் அகதிகளாக குடியேறி இருத்தல் வேண்டும். அதாவது இந்த திருத்தத்திற்கு முன்பு வரை இவ்வாறாக குடியுரிமை பெற ஒருவர் 11 வருடங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது இந்த திருத்தத்தின் மூலம் குறைந்தது 5 வருடங்கள் மட்;டும் இந்தியாவில் அகதியாக குடியேறியவர்களாக இருந்தால் போதுமானது.
2.) இவர்கள் அகதிகளாக கீழ்காணும் 3 நாடுகளில் ஏதோ ஒரு நாட்டில் மட்டும் இருந்து இந்தியாவிற்குள் வந்தவர்களாக இருத்தல் வேண்டும்

– பாக்கிஸ்தான் (அல்லது)
– பங்களாதேஷ் (அல்லது)
– ஆப்கானிஸ்த்தான்

இந்த மூன்று நாடுகளில் ஏதோ ஒரு நட்டில் இருந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேரியவர்களாக இருத்தல் வேண்டும்.

3.) இரண்டாவதாக அவர்கள் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகிய சிறும்பான்மை இனத்தவராக இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் கீழ்க்கண்ட மதத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

– இந்து
– சீக்கியர்
– பௌத்த மதம்
– ஜெயின்
– பார்சி
– கிருத்துவர்

இந்த மதங்களைச் சார்ந்தவர்கள் இந்தியாவில் பெரும்பான்மையினராக இருக்கலாம் ஆனால் பாக்கிஸ்த்தான்¸ பங்ளாதேஷ் மற்றும் ஆப்க்கானிஸ்த்தான் போன்ற இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாட்டில் இந்து¸ கிக்கிய¸ பௌத்த¸ ஜெயின்¸ பார்சி மற்றும் கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு சிறுபான்மையினராகவே இருப்பார்கள். அவ்வாறு சிறுபான்மையினராக இருப்பவர்கள் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகி அந்த நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கி அவர்களை இந்தியர்களாக அங்கிகாரம் கெடுப்பதே இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சாராம்சம்.

குடிமக்களின் தேசிய பதிவு:
NRC என்பது National Register of Citizens ஆகும். இது அசாம் மாநிலத்தில் வசிக்கும் இந்திய குடிமக்களின் பதிவு ஆகும். இது அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியோறுபவர்களை கட்டுப்படுத்த அரசால் 1951 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப்பின் கொண்டுவரப்பட்டதாகும். இதில் அசாம் மாநிலத்தில் நேர்மையான முறையில் குடியேறியவர்களையும்¸ சட்டவிரோதமாக குடியோறியவர்களையும் பிரித்து கண்டறிய கொண்டுவரப்பட்ட பதிவு மட்டுமே. இதற்கும் தற்போதைய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

முடிவுரை:
இந்த பதிவின் மூலம் குடியுரிமைத் திருத்தச் சட்டம்¸ 2019 பற்றிய தெளிவான புரிதல் கிடைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன். மக்கள்¸ அரசியல் நாடகங்களுக்கு வீழ்ச்சி அடையாமல் உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளாமல் போர்கொடி எடுப்பது தவறு.

 

Professor Atul Alexander is an Assistant Professor of Law at the National University of Juridical Sciences (NUJS), Kolkata.
Preethi Rani is a LLM candidate at the Government Law College, Tirunelveli.

Leave a comment